Baby Massage Oil (Tamil)

Baby Massage Oil (Tamil)
விளக்கம்:
குழந்தை பிறந்த வீட்டில் பெரியவர்களது வளர்ப்பு முறை பாரம்பரியமாக இருந்தால் இளைய தலைமுறையினரின் வளர்ப்பு முறை வேறு மாதிரி இருக்கும் . அதுவும் சமீப வருடங்களாகவே பெண்கள் பலவீனமாக இருந்து குழந்தைகளை பெறுவது அதிகரித்து வருகிறது. இதில் குழந்தையின் உடலும் அதிக பலவீனத்தை கொண்டிருக்கிறது. எனவே குழந்தையின் தசைகளை மிருதுவாக்கவும் மற்றும் வலிமையாக்கவும் எண்ணெய் மசாஜ் நல்ல பலன்களை தரும்.

பயன்கள்:
ஆயில் மசாஜ் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. அதில் எண்ணெய் மசாஜ் செய்வதால் குழந்தைகளின் மூளை வளர்ச்சி அதிகரிக்கிறது. உடல் எடை ஆரோக்கியமாக அதிகரிக்கிறது. உடலின் சூட்டினை சமநிலையாக வைக்கிறது. சருமம் மிருதுவாகவும் பொலிவாகவும் வைக்கிறது. தசையின் வலிமைக்கும் உதவுகிறது. மொத்தமாக சொன்னால் குழந்தைகளுக்கு மசாஜ் செய்வதால் அது குழந்தைகளுக்கு நன்மையை மட்டுமே தருகிறது என்கிறது ஆய்வு.குழந்தைகளின் தலை முதல் கால் வரை எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்யலாம். மசாஜ் செய்யும் போது குழந்தையின் கை,கால்களில் மெதுவாக தேய்த்து கை கால்களை நீட்டி மடக்க செய்தால் போதும். 10 நிமிடங்கள் கழித்து குழந்தையை குளிப்பாட்டலாம்.
உச்சந்தலையில் வடியும் அளவு எண்ணெய் வைக்காமல் இலேசாக வைத்தாலே போதுமானது.எந்த காரணத்தை கொண்டும் குழந்தைகளின் கண் ,காது ,மூக்கு பகுதியில் ஆயிலை விட வேண்டாம்.குழந்தைகளின் மிருதுவான சருமத்துக்கு சுத்தமான சூரியகாந்தி எண்ணெய் மற்றும் பாதாம் எண்ணெய் மிகவும் ஏற்றது.இவை சுத்தமாகவும் சுகாதாரமாகவும் இருக்கும் என்பதால் குழந்தைகளுக்கு எந்தவிதமான ஆரோக்கிய குறைபாட்டையும் உண்டாக்காது.தேவையான அளவு எடுத்து மிருதுவாக மசாஜ் செய்து குளிப்பாட்டினால் குழந்தை பட்டு போன்ற சருமத்துடன் ஆரோக்கியமாய் வளரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Home
Shop
0
Cart
wishlist
Account